ஏன் 16 ஜிபி பென் ட்ரைவ் மொத்தமாக காட்ட மாட்டேங்குது..?

*ஏன் 16 ஜிபி பென் ட்ரைவ்*

பொதுவாக லேப்டாப்புகளில் 16 ஜிபி பென் ட்ரைவ் உபயோகிக்கும் பொழுது அதில் 16 ஜிபி காட்டாமல் வெறும் 14.4 ஜிபி தான் காட்டுகிறது மீதி உள்ள 1.6 ஜிபி எங்கு சென்றது? பிராண்ட் நம்மளை ஏமாற்றுகிறார்களா அல்லது நாம்தான் இவ்வளவு நாள் ஏமாறுகிறோமா?

இதற்கான காரணம் என்னவென்று இப்போது பார்ப்போம்:

பென் டிரைவுடைய 16 ஜிபி என்பது நமது லேப்டாப்பில் உள்ள Windows எடுத்துக்கொள்ளும் 1024 Mb = 1 Gb என்ற கணக்கு கிடையாது. பென் டிரைவ்விக்குடைய ஜிபி என்பது 1000 Mb = 1 Gb ஆகும்.

அதன்படி பார்க்கும்பொழுது பென் டிரைவில் 16 ஜிபி என்பதற்குள் 16,000,000,000 Bytes இருக்கும். நீங்கள் இந்ந 16 Million bytesயை மூன்று தடவை 1024லை வகுத்தால் 14.9 ஜிபிகள் கிடைக்கும்.

ஆனால் இப்போதும் 14.4 ஜிபி தான் உள்ளது மீதி 5 ஜிபி எங்கே என்று நீங்கள் கேட்கலாம்.

அந்த 5 ஜிபி எல்லாம் அந்தப் பென் டிரைவில் உள்ள Drivers, Cache போன்ற அதற்குத் தேவையான Dataவை store பண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளும்.

இப்போது உங்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும் அந்த பிராண்ட் நம்மளை ஏமாற்றவில்லை ஆனால் வியாபார யுக்தி கொண்டு நம்மளை குழப்பி விடுகிறார்கள்.