AK வை புகழ்ந்து தள்ளினார் ராஜமவுலி ஏன்..!

*AK வை புகழ்ந்து ராஜமவுலி*

ஒருவழியாக அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள பிரமாண்ட திரைப்படமான RRR படத்தின் இயக்குனர் ராஜமவுலி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் அஜீத் குமாரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

“நான் ஒரு முறை அஜித்தை ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சந்தித்தேன். அங்கு ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும். அங்கு அஜித் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார். என்னை அழைத்துச் சென்று அவரது டேபிளில் அமர வைத்தார் அதன் பிறகு என் மனைவி வர அவரையும் சென்று அழைத்து வந்து அமர வைத்தார். Im Ajith என அவரே என் மனைவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவரிடம் அதிகம் பேசினோம்“.

“தற்போது அவர் செய்துள்ள விஷயம் என்னை பெரிய இன்ஸ்பயர் செய்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கிறார்கள். ‘தல’ என்பதை நீக்கிவிட்டு அஜித்குமார் அல்லது AK என்று மட்டும் கூப்பிட சொன்ன அவருக்கு Hats Off” என ராஜமவுலி கூறியுள்ளார்.

தற்போது ராஜமவுலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment