என் பொண்டாட்டி கிட்ட அஜித் சத்தியம் பண்ணுவாரு எதுக்கு

*அஜித் சத்தியம் பண்ணுவாரு*

வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய இயக்குனராக இருந்து வருபவர், சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.

நடிகர் அஜித் குமாரை வைத்து மங்காத்தா எனும் திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றியை பெற்றுத் தந்தவர். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

சென்னை 28 படத்திற்கு முன்னே நடிகர் அஜித்குமாரை எனக்கு மிகவும் நெருக்கமாக தெரியும், என்னுடைய வீட்டுக்கு பைக்கில் வருவார், வீட்டில் வந்து காப்பி சாப்பிட்டு போவார், என்னை வெளியில் விளையாட அழைத்துச் செல்வார் அதற்கு என் மனைவியிடம் அனுமதி வாங்குவார்”.

“ஒரு தடவை எனக்கு யாரோ போல் போன் செய்து நானும் சென்னை 28 தான், எனக்கும் கிரிக்கெட் விளையாட தெரியும், எனக்கு ஏதாவது இரண்டு காட்சிகளில் வாய்ப்பு கொடுங்கள், இப்படி அஜித்குமார் கேலியாக கேட்டார்” என்று வெங்கட் பிரபு கூறினார்.

மேலும் “சென்னை 28 திரைப்படம் பார்த்த பிறகு அஜித்குமார் என்னை சில தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி கதை கூற சொன்னார். ஆனால் அந்த தயாரிப்பாளர்களுக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை, ஆனால் எப்படியோ இறுதியாக அஜீத் குமாரை வைத்து மங்காத்தா திரைப்படம் எடுத்து விட்டேன்” என்று கூறினார்.