ஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் ஒரே ஆடை அணிந்திருந்தார்..?

*ஒரே ஆடை அணிந்திருந்தார்*

1980களில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் பிளாக் துர்ட்லேனெக் டி-ஷர்ட்டும் ப்ளூ லீவிஸ் பேண்டும் அணிந்திருப்பார். சாதாரண நாட்களிலும் வேலை நாட்களிலும் இந்த உடைகளை அணிந்து இருப்பார் இதற்குக் காரணம் என்னவென்றால்.

1980களில் ஜப்பானில் உள்ள சோனி ஃபேக்டரிக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சென்றிருந்தார். அப்போது அங்கு உள்ள அனைத்து தொழிலாளர்களும் யூனிபார்ம் ஆக ஆடைகள் அணிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த காலத்தில் யூனிஃபார்ம் என்பது பழகிய ஒன்று ஆனால் அன்று இது புதிதாக இருந்தது.

ஒரே ஆடைகளை எல்லாம் நாட்களுக்கும் அணிந்திருப்பது ஸ்டீவ் ஜாப்பிற்க்கு மிகவும் பிடித்துப் போனது.

அதனால் ஸ்டீவ் ஜாப்ஸ் இங்த ஒரு விஷயத்தை நாம் கடைப்பிடித்தால் தொழிலாளர்களுக்கு இடையே ஒரு நல்ல ஒற்றுமை ஏற்படும் என்று நினைத்தார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இஸ்ஸேய் மியகே என்னும் டிசைனரை அழைத்து தனது ஆப்பிள் கம்பெனியிலும் இதுபோன்ற ஒரு விஷயத்தைக் கொண்டு வரவேண்டும் என்று யோசித்தார். ஆனால் இந்த ஐடியா அப்பிள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இந்த நோக்கத்தை அவர் கைவிட்டார்.

தனக்கு இந்த விஷயம் ரொம்ப பிடித்ததால் இஸ்ஸேய் மியகேயுடன் சேர்ந்து அவருடைய பிளாக் துர்ட்லேனெக் டி-ஷர்ட்டும் ப்ளூ லீவிஸ் பேண்டும் வடிவமைத்துக் கொண்டார். அதிலிருந்து அவர் தனது இறுதி காலம் வரை இந்த பிளாக் துர்ட்லேனெக் டி-ஷர்ட்டும் ப்ளூ லீவிஸ் பேண்டையும் அணிந்திருந்தார்.

இதை ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமில்லாமல் பல பேர் இதைப் பின்பற்றுவார்கள் அதற்குப் பெயர் என்னவென்றால் Decision Fatigue.

Decision Fatigue என்பது ஒரு நாளில் நீங்கள் நிறைய டிசிஷன் எடுக்கும்பொழுது புதிதாக ஒரு டிசிஷன் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.