அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா?

*அஜித்தின் வலிமை*

அஜித்தின் வலிமை திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாகும். மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியிடப்படுகிறது. இப்போது படத்தின் லெட்டஸ்ட் சலசலப்பு என்னவென்றால் வலிமை முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க உள்ளது.

வலிமை படத்தின் ஸ்பெஷல் ஷோக்களுக்கு அனுமதி பெறும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நள்ளிரவு 1 மணிக்கு காட்சிகள் வைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல்நாளிலேயே படத்திற்கு அதிக ஷோக்கள் கிடைக்கும்.

மேலும் படத்தின் சரியான ரிலீஸ் தேதி விரைவில் சிறப்பு போஸ்டருடன் வெளியிடப்படும். சமீபத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டாவது சிங்கிள்-டிராக் அம்மா பாடல் வெளியிடப்பட்டது.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பானது உங்கள் இதயத்தைக் கவரும்.