கடினமான பாதையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

*உலக கோப்பைக்கு*

உலககோப்பை விளையாடுவதற்கு தகுதியாக ஆட்டம் விளையாடப்பட்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் செர்பியா உடனான இறுதி குரூப் போட்டி நடைபெற்றது அதில் செர்பியா 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. இதனால் இப்போது போர்ச்சுகல் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால்தான் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு தகுதியை அடைய முடியும்.

இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இறுதி உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

பிளெ ஆஃப் சுற்று ஒரு கடினமான பாதை என்றே சொல்லலாம். 2020 Euro சாம்பியன்ஸ் அணி இத்தாலியும் இதே பாதையில் மாட்டிக் கொண்டுள்ளது.

துரதிஷ்டவசமாக அடுத்த ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டு பெரிய அணிகளில் ஒன்று போர்ச்சுக்கல் அல்லது இத்தாலி பங்கேற்க முடியாமலாகிவிடும்.

போர்ச்சுகல் தனது அரை இறுதிப்போட்டியில் துருக்கியை எதிர்கொல்கிறது அதேநேரத்தில் இத்தாலியும் வடக்கு மாசிடோனியாவும் பலப்பரீட்சை நடத்துகிறது.

எதிர்பார்த்தபடி இத்தாலியும் போர்ச்சுகளும் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் இருவரும் போர்ச்சுகலில் பலப்பரிட்சை நடத்துவர்.

இதில் போர்ச்சுக்கல் தோற்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்க்கு தனது இறுதி உலக கோப்பை போட்டிகளை விளையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.

இதற்கடுத்து 2026ஆம் ஆண்டில் தான் அடுத்த உலக கோப்பை நடைபெறும் அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ விற்கு வயது 41ஆகிவிடும். அதனால் அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை கிறிஸ்டியானோ ரொனால்டோ விற்கு இறுதியான உலக கோப்பை என்று கூறலாம்.