தமிழ்நாட்டின் அற்புதமான நீர்வீழ்ச்சிகள்..?

*தமிழ்நாட்டின் நீர்வீழ்ச்சிகள்*

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டது. மாநிலத்தில் சில அழகான காடுகள், அழகிய ஏரிகள் மற்றும் மிகவும் மயக்கும் நீர்வீழ்ச்சிகளால் நிரம்பியுள்ளது. பருவ மழை வந்தால் தமிழ்நாடு ஒரு அழகான அதிசய பூமியாக மாறும்.

தமிழ்நாட்டில் மிக அழகான மற்றும் பார்க்க வேண்டிய சில நீர்விழ்ச்சிகளை கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்.

தளியார் நீர்வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி மலையில் உள்ள இந்த அருவி தமிழகத்தின் மிக உயரமான அருவிகளில் ஒன்றாகும். இது எலி வால் நீர்வீழ்ச்சி என்று புகழ் பெற்றது.

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி மாநிலத்தில் ஒரு அழகான நீர்வீழ்ச்சிகளிள் ஒன்றாகும். 50 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் நீச்சல் குளம் உள்ளது.

மங்கி பால்ஸ்

கோயம்புத்தூர் ஆனைமலை மலைத்தொடரில் உள்ளது இந்த மங்கி பால்ஸ். இப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சி உச்ச பருவத்தில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. இப்பகுதி முழுவதும் பசுமையான காடுகள் மற்றும் பாறைகளால் கூறப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

தமிழ்நாட்டில் மற்றொரு பிரமிக்கவைக்கும் அருவி ஒகேனக்கல் அருவி. உயரம் மற்றும் அழகு காரணமாக இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி தர்மபுரி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் உள்ளது. அருவியில் மருத்துவ குணம் உள்ளதாக குறிப்பிடுவதால் மக்கள் அடிக்கடி இங்கு வந்து நீராடுவது வழக்கம்.

குற்றாலம் அருவி

மேற்கு தொடர்ச்சி மலையில் சித்தார் நதியால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள குற்றாலம் அருவி கண்கொள்ளா காட்சி அளிக்கும். தமிழ்நாட்டில் இந்த அருவிக்கு தான் மக்கள் நிறைந்து வருவது வழக்கம்.