யோகி பாபு தற்போதைய சொத்து மதிப்பு

*யோகி பாபு*

தமிழ் சினிமா திரையுலகில் தற்போதைய முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. தற்போது வரக்கூடிய அனைத்து படங்களிளும் இவரை பார்க்க முடிகிறது.

யோகி பாபு தனது ஆரம்ப காலத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தவர். அதன் பிறகு தனது விடா முயற்சியால் தற்போது பெரிய பெரிய நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகனாக கூர்கா, மண்டேலா, ஜாம்பி முடி போன்ற படங்களிலும் நடித்துவிட்டார். இதனால் இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக இருக்கிறார். இவரின் யதார்த்தமான காமெடி காட்சிகளை மக்கள் மிகவும் ரசிக்கின்றனர்.

மஞ்சு பார்கவி சென்ற பெண்ணை 2020ஆம் ஆண்டு யோகி பாபு திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆரம்பத்தில் யோகி பாபு ஒரு படத்திற்கு தினமும் 500 ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி காமெடி துறையில் ஒரு நட்சத்திர இடத்தைப் பிடித்து ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவை அனைத்தையும் கணக்கிட்டு தற்போதைய யோகி பாபுவின் சொத்து மதிப்பு 40 கோடி என்கிறார்கள். ஆனால் 40 கோடி என்பது குறைவானது என்று யோகி பாபுவின் ரசிகர்கள் கூறுகிறார்கள். 40 கோடிக்கும் மேல் அவரிடம் இருக்கும் என கூறப்படுகிறது.