Stock Market வழியாக நீங்கள் சம்பாதிக்க முடியும் !! Stocks App !!

Stock Market வழியாக நீங்கள் சம்பாதிக்க முடியும் !! Stocks App !!

stocks app

இப்போது நாம் இந்த பதிவில் ஸ்டாக் மார்க்கெட்டில் வழியாக சம்பாதிக்க முடியுமா ? பணம் சம்பாதிக்க முடியும் என்றால் எவ்வாறு சம்பாதிக்க முடியும் ? மற்றும் முதலாவதாக ஸ்டாக் மார்க்கெட் என்றால் என்ன ? போன்ற பல கேள்விக்கான விடையை இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். எனவே நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும்.

Stock Market என்றால் என்ன ?

முதலில் பங்குச் சந்தை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பொருளாதார வல்லுநர்கள் கூறும் பல்வேறு தகவல்களைப் புரிந்துகொள்ள முடியும்.

எனவே இப்போது பங்குச் சந்தை என்றால் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். இந்தப் Stock Market தமிழில் பங்குச் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், பங்குச் சந்தை என்பது பொது நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் வாங்குபவர்களும் விற்பவர்களும் சந்திக்கும் இடமாகும்.

அதாவது பங்குச் சந்தை என்பது பொதுவாக வாங்குபவர்களும் விற்பவர்களும் சந்திக்கும் இடம் என்று சொல்லலாம். இதை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் உறுதியாக சொல்லலாம்.

நாங்கள் வழக்கமாக ஒரு கடையை எடுப்போம். அந்த கடையில் வாங்குபவர்களும் விற்பவர்களும் சந்திக்கிறார்கள். இதைத்தான் இங்கு பங்குச் சந்தை என்கிறோம். இது ஒரு முழுமையான வரையறை அல்ல, ஆனால் நீங்கள் புரிந்துகொள்வதை எளிதாக்கும் ஒரு வரையறை.

மேலும் இந்த பங்குச் சந்தை குறித்த பல்வேறு தகவல்களை இப்போது பார்க்கலாம். அப்போதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். எனவே நீங்கள் முழு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், எனவே முழுவதையும் படியுங்கள்.

Read More :- Cement பக்கம் போகாதீங்க !! அடிவாங்கும் Market !! stock market global !!

Stock Market-இல் முதலீடு செய்வது சரியா ?

ஸ்டாக் மார்க்கெட் நிச்சயமாக முதலீடு செய்ய சரியான வழி என்று தான் கூற வேண்டும். ஆனால் நீங்கள் நிச்சயமாக அதில் கற்றுத் தேர்ந்தவராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அது சரியான வழியாக இருக்கும்.

மேலும் நீங்கள் உங்களுக்கு ஸ்டார் பற்றி எதுவும் தெரியாமல் நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வது உங்கள் பணத்தை நீங்களே வீன் அடிப்பதற்கு சமம். எனவே ஸ்டாக் மார்க்கெட் என்பது நிச்சயமாக முதலீடு செய்ய ஏற்ற இடம் என்று கூறலாம்.

ஆனால் நீங்கள் அதில் சிறிதளவாவது கற்று தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நிச்சயமாக உங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட் என்பது முதலீடு செய்ய சரியான இடமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Stock Market வழியாக உடனே பணம் கிடைக்குமா ?

ஸ்டாக் மார்க்கெட் வழியாக உடனே பணம் கிடைக்குமா ? என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக இல்லை. நீங்கள் நிச்சயமாக ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்தால் காத்திருந்து ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் தற்போதைய இளைஞர்கள் காலையில் முதலீடு செய்துவிட்டு அதாவது ஸ்டாக் மார்க்கெட்டில் காலையில் முதலீடு செய்துவிட்டு மாலையில் அவரது முதலீடு இரட்டிப்பாக வேண்டும் என்று கருதுகிறார்கள். மேலும் அவ்வாறு மாலை நேரத்தில் இவருடைய முதலீடு என்பது இரண்டு மடங்காக வரவில்லை என்றால் நட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கருதுகிறார்கள்.

மேலும் நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக காத்திருந்து ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றுதான் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்கள் காலையில் முதலீடு செய்துவிட்டு மாலையில் அந்த பணம் இரட்டிப்பாக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்றுதான் கூறியாக வேண்டும்.

Stock Market-இல் நட்டம் ஏற்படுமா ?

ஸ்டாக் மார்க்கெட் வழியாக நத்தம் ஏற்படுமா என்று கேட்டால் நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்த பணத்தை ஒரு சில சமயங்களில் உங்களால் இழக்க நேரிடும். மேலும் இது அனைத்து சமயங்களிலும் நடக்காது என்று கூறலாம்.

ஸ்டாக் மார்க்கெட்டில் எவ்வளவு கற்று தெரிந்திருந்தாலும் அவர்களுக்கும் இழப்பு என்பது சாதாரணமாக நடைபெறும் ஒன்றுதான். எனவே நீங்கள் முதலீடு செய்த பணம் எப்பொழுதும் நிச்சயமாக இரண்டு மடங்குடன் கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் சாதாரணமாகவே நீங்கள் இதில் பணத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது என்று கூறலாம். எனவே நீங்கள் எதுவும் தெரியாமல் இதில் முதலீடு செய்தால் நிச்சயமாக உங்கள் பணத்தை விரைவில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் உங்களுக்கு இதில் ஆர்வம் உள்ளது இந்த சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இதைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பொருத்து நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.

Stock Market என்பது சூதாட்டமா ?

ஸ்டாக் மார்க்கெட் என்பது சூதாட்டமா ? என்ற இந்த கேள்விக்கான விடை என்பது நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். மேலும் இவ்வாறு கூறுபவர்கள் நிச்சயமாக முட்டாளாக மட்டுமே இருக்க முடியும்.

இவ்வாறு பெரும்பாலும் எதுவும் தெரியாமல் அதாவது ஸ்டாக் மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாமல் முதலீடு செய்தவர்கள் மட்டுமே கூறுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே நீங்கள் எதுவும் தெரியாமல் எந்த தொழிலிலும் முதலீடு செய்தாலும் அந்த தொழில் நிச்சயமாக உங்களுக்கு சூதாட்டம் போலத்தான் தெரியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Trading Apps பயன்படுத்தலமா ?

தற்போது இணையத்தில் பல்வேறு விதமான செயலிகள் ட்ரேடிங் செய்வதற்காக கிடைக்கிறது. மேலும் அவைகள் குறிப்பிட்ட அளவு கட்டணத்தை வசூலித்து கொண்டு உங்களுக்கு ட்ரேடிங்க் செய்ய அனுமதிக்கிறது.

மேலும் இந்த செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாமா என்று கேட்டால் நிச்சயமாக இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

கடனை வாங்கி முதலீடு செய்யலாமா ?

பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார் என்று பார்த்தோம் என்றால் நீங்கள் ஒருபோதும் ஸ்டாக் மார்க்கெட்டிற்கு என்று தனியாக மட்டன் நபர்களிடம் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

மேலும் இது உங்களுடைய தேவைக்கு ஏற்ப உங்களிடம் போதுமான பணம் இருக்கும் சமயத்தில் மட்டுமே முதலீடு செய்ய சரியானதாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் ஒருவேளை கடன் வாங்கி இதில் முதலீடு செய்யும் சமயத்தில் நம்மால் நிச்சயமாக கூற முடியாது இது இரட்டிப்பு லாபத்தை தருமா என்று எனவே நட்டம் ஏற்பட்டுவிட்டால் கடனை அடைப்பது என்பது கடினமாக கூட முடியலாம்.

எனவே நீங்கள் ஒருபோதும் கடன் வாங்கி இதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் வந்து விடக்கூடாது. உங்கள் சொந்தப் பணத்தையும் உங்கள் தேவைக்கு போதுமானதாக இருப்பின் மட்டுமே பயன்படுத்தவும்.

Stock Market வழியாக நீங்கள் சம்பாதிக்க முடியும் !!

ஸ்டாக் மார்க்கெட்டிங் வழியாக உங்களால் சம்பாதிக்க முடியுமா ? என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக உங்களால் சம்பாதிக்க முடியும். நான் ஆரம்பத்தில் கூறியது போல அதற்கு நீங்கள் நிச்சயமாக ஸ்டாக் மார்க்கெட் பற்றிய தகவல்களை சிறிதளவாவது அறிந்து வைத்திருக்கவேண்டிய அவசியம்.

மேலும் நீங்கள் அவ்வாறு தெரிந்து வைத்திருக்கும் சமயத்தில் அத்துடன் கூடவே உங்களிடம் போதுமான பணம் என்பது இருக்கும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். மேலும் பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் முதலீடு செய்யலாம்.

நீங்கள் சரியாக முறைப்படி கற்றுக்கொண்டு முறையாக ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் சமயத்தில் நிச்சயமாக உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் நான் முதலில் கூறியது போல ஸ்டாக் மார்க்கெட்டில் நட்டம் ஏற்படுகிறது என்பது சாதாரணமான ஒரு விஷயம் என்றுதான் கூறியாக வேண்டும். உங்களுக்கு அவ்வாறு நட்டம் ஏற்படும் சமயத்தில் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக உங்களுக்கு எந்தவித பயனும் இருக்காது என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் நீங்கள் ஒருபோதும் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்க வேண்டாம்.

அதுபோல நீங்கள் ஒரு முறை முதலீடு செய்து அது நட்டம் ஏற்பட்டால் மீண்டும் முதலீடு செய்ய தயங்காதீர்கள். ‌‌

Stock Market வழியாக நீங்கள் சம்பாதிக்க முடியும் !! Stocks App !!