யுவன் சங்கர் ராஜா திரும்ப மாஸ் காட்ட வருகிறார்

*யுவன் சங்கர் ராஜா*

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த ‘கோமாளி‘ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பள்ளிக்காலத்தில் ‘பையா‘ படத்தின் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்கும்போது ஜாம்பவான் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம்” என்று பிரதீப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இயக்குனர் மேலும் கூறுகையில் “தனது நிஜ வாழ்க்கை காதல் கதைகள் அனைத்தும் யுவனின் பாடல்களுடன் தொடங்கி முடிந்தது” என்றும் “இந்தப்படமும் அதையே கடந்து செல்லும்” என்று கூறினார்.

யுவன் சங்கர் ராஜாவும் இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ஏஜிஎஸ் சினிமா தயாரித்து பிரதீப் இயக்கிய இந்த அற்புதமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்“.