டான் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை..?

*சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை*

சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் டான். டான் திரைப்படம் ஒரு கல்லூரியை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட திரைக்கதையாகும். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார், எஸ் ஜே சூர்யா கல்லூரியின் முதன்மை ஆசிரியராக நடித்துள்ளார், ஹீரோயினியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் புரோடக்சன் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளனர். அடுத்த வருடம்(2022) ஜனவரி மாதத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

தற்போது டான் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை Zee நெட்வொர்க் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் திரைக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு Zee தமிழ் டிவி சேனல் மற்றும் Zee 5 OTT தளத்தில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.